பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

திட்டமிடலும் உத்வேகமும் வாழ்வை உயர்த்தும்.

அரசாட்சி கிரகமான சூரியனும் பூமிகாரகனான செவ்வாயும் சேர்ந்து உருவாக்கும் அளப்பறிய ஆற்றல் இந்தத் தேதியில் பிறந்தவர்களிடம் இருக்கும். இவர்கள் புதிய சரித்திரத்தை உருவாக்கப் பிறந்தவர்கள். சூரியன், செவ்வாய் இரண்டுமே நெருப்புக் கிரகங்கள்தான். இந்த இரண்டும் கலந்த ஆற்றலில் பிறந்தவர்களிடம் சூரியனுடைய திறமையான திட்டமிடலும், செவ்வாயின் உத்வேகமும் சரி பாதியாகக் கலந்திருக்கும். சவால்கள் வந்து கொண்டுதான் இருக்கும் என்று அதற்கு பழகிக்கொள்வார்கள்.

நிராயுதபாணியாகத் தவிப்பவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆபத்பாந்தவனாகத்  துணை நிற்பார்கள். இப்படித்தான் பழக வேண்டும் என்று கட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

மதம், மொழி, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளையாக இருந்தாலும் தவறு செய்தால் மன்னிக்க மாட்டார்கள். இவர்களில் பலர், அதிகாரப் பதவியில் இருந்தாலும் பதவி கொடுத்த சலுகைகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதால் தேசப் பற்று மிதமிஞ்சியிருக்கும். அலுவலகத்தில் கௌரவமாக இருப்பவர்கள், வீட்டுக்கு வந்தால் விளையாட்டுப் பிள்ளையாக மாறிவிடுவார்கள்.

நிறைகுடம்போல ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பார்கள். கணித சூத்திரங்கள், அறிவியல் சமன்பாடுகள் போன்ற கடினமானவற்றையும் மற்றும் வரலாற்றுப் பகுதிகளையும் நினைவில் வைத்திருப்பார்கள். விளைவுகளைக் கருத்தில்கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.மிகப் பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick