சக்தி தரிசனம் - குழந்தை வரம் அருளும் ‘கொலுசு’ பிரார்த்தனை!

இரா.செந்தில்குமார் , படங்கள்: ச.வெங்கடேசன்

சென்னை - வேலூர் சாலையில், சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ளது தாமல். இந்தத் தலத்தில், திருவடிகளில் கொலுசு அணிந்தபடி காட்சித் தருகிறார், ஸ்ரீதாமோதரப் பெருமாள்.

ண்ணனின் குழந்தைப் பருவச் சேட்டைகளைப் பொறுக்கமாட்டாத யசோதை, கண்ணனின் வயிற்றில் தாம்புக் கயிற்றைக் கட்டி, உரலுடன் பிணைத்துவிட்டாள். அதனால் கண்ணனின் வயிற்றில் பதிந்த வடு, கண்ணனுக்குத் தாமோதரன் என்னும் திருப்பெயர் ஏற்படக் காரணமானது. இப்படி, வயிற்றில் தாம்புக் கயிறு பிணைத்த தழும்புடன் கூடிய கண்ணனின் கோலத்தைத் தரிசிக்க விரும்பிய மகரிஷிகளுக்காக, இங்கே கோயில் கொண்டாராம் பெருமாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick