சக்தி தரிசனம் - மாங்கள்ய பலம் அருளும் குரு தட்சிணாமூர்த்தி

எஸ்.கண்ணன் கோபாலன், படம்: க.சதீஷ்குமார்

தென்முக தெய்வமாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஞானத்தின் வடிவம். சனகாதி முனிவர்கள் சூழ்ந்திருக்க, சின்முத்திரை காட்டியருளும் இந்த ஆலமர் செல்வனை வழிபட்டால், அறியாமை நீங்கும்; கல்வி, கலைஞானம் ஸித்திக்கும்.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் என்னும் தலத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் விசேஷக் கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. 11 ராசிச் சின்னங்கள் (கும்பம் தவிர) திகழும் சிறு குன்று போன்ற அமைப்பின் மீது, நந்தி முழந்தாளிட்ட நிலையில் இருக்க, நந்தியின் மேல் கும்ப ராசியைப் பீடமாகக்கொண்டு புன்னகை தவழ அமர்ந்திருக்கிறார், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick