கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா? | Spiritual Questions and Answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாங்கள் அபார்ட்மென்ட்டில் சிறிய வீட்டில் வசிக்கிறோம். பூஜையறை தனியாக இல்லை. ஓர் அலமாரியில் தெய்வங்களை வைத்து வணங்குகிறோம். பூஜை நேரம் தவிர, மற்ற நேரங்களில் அலமாரியை மூடிவைக்கச் சொல்கிறார் கணவர். இது சரியா?

- கே.மாரியம்மாள், சாத்தூர்


பூஜை முடிந்ததும், அலமாரியை மூடிவிடலாம். கதவுகள் இல்லையெனில் திரையிட்டு மூடலாம். இறைவன் குடியிருக்கும் பூஜையறை அல்லது பூஜா அலமாரியின் கதவைத் திறந்தபடி வைத்திருந்து, குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பிற வேலைகளில் கவனம் செலுத்துவதும், சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதுமான செயல்கள் இறைவனை அவமதிப்ப தாகும். ஆகவே, கதவை மூடிவைப்பதில் தவறேதும் இல்லை.
நம் வீட்டில் ஓர் இடத்தை அல்லது அறையை இறைவனுக்கு ஒதுக்கியிருப்பதாக நினைக்காதீர்கள். இறைவன் குடியிருக்கும் வீட்டில் நாம் வாழ்கிறோம் என நினையுங்கள். இதனால் பணிவு, பரிவு, பக்தி ஆகியவை தழைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick