யோகா... ஆஹா!

ஜி.லட்சுமணன்

யோகா என்பது, மனதை ஒரு நிலைப்படுத்தும் மந்திரம்.  உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கடவுளை அறிய வேண்டும் என்பதுதான் யோகா செய்வதின் சாரம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

நாம் மனம் ஒன்றி ஒன்றைச் செய்யும் போதுதான், அந்தச் செயல் வெற்றிகரமாக முடியும். மனம் ஒன்றிய நிலையில்தான் இறை சக்தியையும் நம்மால் உணர முடியும்.  எனவே, மன ஒருமையானது, நம்முடைய செயல்களைச் செய்வதற்கு மட்டுமல்ல, இறைவனை தியானிப்பதற்கும் மிகவும் அவசியமாகும்.

அதேநேரத்தில் இது ஒரு மருத்து வம் சார்ந்த வாழ்வியல் முறை என்பதால், பல உடல் பிணிகளைப் போக்கி, மனம் புத்துணர்ச்சியைப் பெற உதவுகிறது. எனவே, இன்றைய இளைஞர்களின் ஆற்றலை வலுப்படுத்த  யோகா அடிப்படையாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick