நீலாயதாட்சிக்கு மஞ்சள் நீராட்டு!

ஆடி சிறப்பிதழ்

நாகப்பட்டினம் அருள்மிகு நீலாயதாட்சி அம்மன் கோயிலில், ஆடிப் பூரத்தன்று, அம்பாளுக்குப் `பூரம் கழித்தல்’ எனும் மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெறும் (இந்த அம்பாள் கன்னியாகத் திகழ்கிறாள் என்பது ஐதீகம்). அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களை ஆலயத்துக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, சிமிழ், வளையல், ரவிக்கைத் துணி, மங்கலச் சரடு ஆகியவற்றைக் கொடுத்து மரியாதை செய்வார்கள். ஆடிப்பூர நன்னாளில் இந்த அம்பிகையைத் தரிசித்து வழிபட்டால், பொருளாதாரம் சிறக்கும்; சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick