ஆன்மிக துளிகள்... | Spiritual titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆன்மிக துளிகள்...

எறும்புகளும் மனிதர்களும்!

ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

``ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை'' என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்: ``இன்றைக்குக் கோயில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது.''

அதன்படியே கோயில் வாசலில் சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. கோயிலுக்குள் வரவில்லை.

``உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டனவே'' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்: 

``எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்!''.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick