குறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆடி சிறப்பிதழ் டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: செ.ராபர்ட்

ள்ளம் உருகி ஓடி வருபவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் ஊட்டத்தூர் பற்றி நீங்கள் `சக்தி விகடன்' மூலம் அறிந்திருப்பீர்கள். அங்கிருக்கும் அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம் பற்றி விரிவாக நாம் வழங்கியிருந்தோம். அக்கோயிலுக்கு மிக அருகிலேயே கோயில் கொண்டிருக்கிறாள், அருள்மிகு செல்லியம்மன்.

‘குறைகளையும் பிரச்னைகளையும் அவள் பாதக்கமலங்களில் கொட்டித் தீர்த்து, சரணாகதி அடைந்துவிட்டால் போதும்... தாய்க்கே உரிய பரிவோடு பிரச்னைகளையெல்லாம் நீக்கி, புது வாழ்க்கையைத் தரும் அம்பிகை எங்கள் செல்லியம்மா’ என்று செல்லியம்மனின்  மகிமை குறித்து பகிர்ந்துகொள்கிறார்கள் உள்ளூர் மக்கள். சிறிய கோயில்தான் என்றாலும் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறது செல்லியம்மனின் சந்நிதானம்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick