கயிலை காலடி காஞ்சி! - 30 - ‘வேத புருஷன்தான் உன்னை காப்பாற்றுவான்’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிவேதிதா, ஓவியம்: ம.செ

ராஜமுந்திரியில் இறங்கி, கோதாவரியின் அக்கரையில் இருக்கும் கொவ்வூர் வேங்கடாசலபதி பெருமாளைத் தரிசிக்க விரும்பிய கோழியாலம் ஸ்ரீதர ஆச்சார்யா, பத்ராசலத்துக்குச் செல்ல நேரிட்டதையும், அங்கே சென்றதும் கோதண்டராம சாஸ்திரிகளும், அந்தர்வேதி நரசிம்மாச்சாரியும் ஒரே மாதிரியாக, ‘பரமாசார்யார் அனுப்பி வந்திருக்கிறாயா?’ என்று கேட்டதையும் பார்த்தோம். அதற்கான காரணமும் இருக்கத்தான் செய்தது.

அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் மகா பெரியவா பத்ராசலத்துக்கு விஜயம் செய்ததுடன், அங்கே ஒரு வேத பாட சாலையையும் ஆரம்பித்து வைத்தார். வேத பாடசாலையில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக ஒருவரை ஏற்பாடு செய்து அனுப்புவ தாகவும் அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தார். எனவே தான், இருவருமே ஸ்ரீதர ஆச்சார்யாவிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கின்றனர். அதன்பிறகு நடந்ததை ஸ்ரீதர ஆச்சார்யா விவரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick