ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜூலை 18 முதல் 31 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

திரிகளுக்கும் உதவி செய்பவர் களே! சூரியன் 4-ல் இருப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமண விஷயங்களை முடிப்பதில் அலைச்சல் இருக்கும். உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். பழுதான பழைய வாகனங் களைக் கொடுத்துவிட்டு புது வாகனங்கள் வாங்குவீர்கள்.

27-ம் தேதி முதல் 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் அமர்வதால் பூர்வீகச் சொத்து விஷயங்கள் முடிவுக்கு வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். ஆனால், தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களை எதிர்த்தவர்கள் விலகிப்போவார்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களின் சாமர்த்தியத்தால் வியாபாரத்தின் தரம் உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சீரிய சிந்தனையால் சாதிக்கும் தருணம் இது.


ரிஷபம்

எதையும் திட்டமிட்டுச் செய்பவர் களே! சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் மன இறுக்கம் நீங்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி, காரியங்களைச் சாதிப்பீர்கள். வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

27-ம் தேதி முதல் ராகு 3-ல் இருப்ப தால் பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். கேது 9-ல் இருப்பதால் எதிர்காலத்துக்காகச் சேமிக்கவும் செய்வீர்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் நண்பர்கள் ஆதரவாக இருப்பர். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து செல்லும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

சமயோசித அறிவால் முன்னேறும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick