ஆஹா... ஆன்மிகம்! - விதானம்!

அருண வசந்தன்

* மேன்மைமிக்கவர்கள், வாழ்வில் சிறந்தவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்குமேல், துணியால் அமைக்கப்படும் நிழல் பந்தல் `விதானம்' எனப்படும். இதைத் தமிழில் `மேற்கட்டி' என்பர்.

* சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், பாவை நோன்பு நோற்கும்போது, பாவை தெய்வ வழிபாடு செய்வதற்கு கண்ணனிடம் சங்கு, பறை, கொடி முதலியவற்றோடு விதானத்தையும் கேட்பதைக் காண்கிறோம்.

* ஆலயங்களில் கருவறையின் உள்ளேயும், சந்நிதிகளில் உள்ள இறையுருவங்களுக்கு மேலாகவும் மேற்கட்டி எனப்படும் விதானம் அமைக்கப் பட்டிருக்கிறது. விதானம் இல்லாது சுவாமியை வணங்கக் கூடாது எனும் மரபும் நெடுங்காலமாக உள்ளது.

* ஆதியில் மேற்கட்டிகள் மட்டுமே விதானம் என்று அழைக்கப்பட்டது, பின்னாளில் ஆலயங்களில் உள்ள கருவறை, மண்டபங்கள் ஆகியவற்றின் உட்கூரைகளையும் விதானங்கள் என்று அழைக்கத் தொடங்கினர்.

* முன்னாளில் முத்துகளைக் கொண்டு தைக்கப்பட்ட பூ வேலைகளால் ஆன விதானங்களே அதிக அளவில் வழக்கத்தில் இருந்தன. இத்தகைய விதானங்களை `முத்து விதானங்கள்' என்று அழைத்தனர்.

* சுவாமி பவனி வரும்போது, முத்து விதானம் பிடித்து நிழல் பரப்பிக்கொண்டு வருதல் பெரிய ராஜ உபசாரமாகக் கருதப்பட்டது. இதை `பவனி விதானம்' என்பர்.

* சிவாலயங்களில் ருத்திராட்சங் களைக்கொண்டு அமைக்கப்படும் ஸ்ரீவிதானங்கள் வழக்கில் வந்துள்ளன. இவற்றை ருத்திராட்சப் பந்தல் என்கின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick