கண்ணன் தலங்கள்!

* தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணன் கோயில், மதுரை வடக்கு மாசி வீதியிலுள்ள நவநீத கிருஷ்ணன் கோயில்தான்.

* திருச்சி பீம்நகர் பகுதியில் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர். கிருஷ்ண ஜயந்தி அன்று நடைபெறும் உறியடித் திருவிழா இங்கு விசேஷம்.

* அம்பாசமுத்திரம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று இங்குப் பெருமாளுக்குத் கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

* கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம் என்பது ஐதீகம்.

* மூலவர் கோபிநாதராகவும், உற்ஸவர் கிருஷ்ணராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்தக் கண்ணன் கால்நடைகளைக் காப்பதாக ஐதீகம்.

* கண்ணன், பாமா - ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குரார் – கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் உள்ள புளியமரம் பூப்பதோ காய்ப்பதோ இல்லை!

* செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்குப் புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

* காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்கமலவல்லி தாயாருடன் கோயில்கொண்டுள்ளார். இங்கே பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அபூர்வ திருக்கோலமாகும்.

* சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயம், பண்டரிபுரத்தில் உள்ள கோபுர அமைப்போடு திகழ்கிறது.

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஒரு காதில் குண்டலமும் மறு காதில் தோடும் அணிந்து காட்சியளிப்பது விசேஷ அம்சமாகும்.

- எஸ்.ராஜம், சேலம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick