கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி! | Katyayani Amman Temple, Kundrathur - Sakthi Vikatan | சக்தி விகடன்

கல்யாண வரம் அருள்வாள் காத்யாயினி!

கே.குமார சிவாச்சாரியார், படங்கள்: மீ.நிவேதன்

ல்லறம் எனும் நல்லறத்தைத் தரும் கல்யாணப் பேறு, ஆண் பெண் இருபாலருக்கும் உரிய வயதில் கிடைக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கைக் கசக்கும்.

இப்படியொரு நிலை ஏற்பட்டுவிடாமல், பெண்ணோ ஆணோ வாழ்க்கை முறையாலும் ஜாதக ரீதியாலும் அவர்களுக்குத் திருமணத் தடை இருந்தால் அதை அகற்றி, மனதுக்கினிய வாழ்க்கை அமையவும் கல்யாணப் பேறு வாய்க்கவும் அருளும் பல திருத்தலங்கள் குறித்து  பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் குன்றத்தூர் - கல்யாண வரம் தரும் காத்யாயினி அம்மன் திருக்கோயில்.

`காத்யாயினி’ என்ற பதத்துக்கு, தன்னை நாடி வந்து வணங்கும் அன்பர்களின் கல்யாண வேண்டுதலை, ஓர் அயன காலத்துக்குள்  நிறைவேற்றி அருள்பவள் என்றே பொருள் கொள்ளலாம். அதாவது காத்யாயினி தேவியை வழிபட்டால் ஆறு மாத  (ஓர் அயனம்) காலத்துக்குள் திருமண பாக்கியம் கிடைக்குமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick