ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 1 முதல் 14 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

எதிர்பார்ப்புகள் இல்லாமல் பழகுபவர்களே!

ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். ஆனால், அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அலைச்சல், வீண் பகை, நிம்மதிக் குறைவு வந்து செல்லும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். 5-ம் தேதி வரை புதன் 5-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். 6-ம் தேதி முதல் புதன் 4-ல் வக்கிரத்தில் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ராகு 4-லும் கேது 10-லும் இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர்களே! பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

உழைப்புக்கான பலன் கிடைக்கும் நேரம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவு உண்டாகும். கணவன் மனைவி இடையில் கசப்பு உணர்வு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சனி 7-ல் நிற்பதால் வாழ்க்கைத்துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சூரியனும் செவ்வாயும் 3-ல் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இளைய சகோதர வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் பிடிவாதம் பிடிப்பார்கள். உத்தியோகத்தில் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

தைரியமாக முடிவுகள் எடுக்கும் நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick