கணபதி இருந்தால் கவலைகள் இல்லை! | Spiritual benefits and Worship methods of Lord Vinayagar - Sakthi Vikatan | சக்தி விகடன்

கணபதி இருந்தால் கவலைகள் இல்லை!

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

`வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் பிள்ளையார் வழிபாடு அருள் செய்யும்.

குறிப்பாக ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் விசேஷமான பலன்கள் கைகூடும்.

உன்னதமான அந்தத் திருநாளில் உள்ளன்போடு கணபதியை வழிபட ஏதுவாக, அவரது மகிமைகளை - பிள்ளையாரின் பெருமைகளை அறிந்து மகிழ்வோமா?

தத்துவப் பொருளே!

முக்காலத்துக்கும் வழிகாட்டுபவர் பிள்ளையார், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத தெய்வம், கணங்களுகெல்லாம் அதிபதி, நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் வாய்க்கும்.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை - படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் - காத்தல், அங்குச கரம் - அழித்தல், பாசம் உள்ள கை - மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்... இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick