பெருமை வாய்ந்த பிள்ளையார்

திருப்பூரில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோயிலில் கிழக்கு நோக்கி அருளும் அம்பிகையின் மடியில் பாலகனாக அமர்ந்து அருள்புரிகிறார் விநாயகர்.

* செங்கல்பட்டு அருகில் உள்ளது ஆனூர். இங்கு அமைந்திருக்கும் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறார் இந்தப் பிள்ளையார். தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை. தற்போது, இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகை மாவட்டத்தில் உள்ள நரிமணம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரை வணங்குபவர்கள், அவரின்  தலையில் குட்டு வைத்து வழிபடுகிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick