கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? ஆற்றங்கரையிலும் குளங்களின் கரைகளிலும் எழுந்தருளியிருக்கிறார் பிள்ளையார். அதேபோல், விநாயக சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கிறோம். பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?

- எஸ். சரஸ்வதி, சென்னை-44


`பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே.

சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது... அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். அப்படித் தோன்றி யவரே முழுமுதற் கடவுளான பிள்ளையார். நீரில் அத்தனை தேவதை களும் குடிகொண்டுள்ளன என்று வேதம் கூறும் (ஆபோவை ஸர்வா தேவதா). அத்தனை ஜீவராசிகளது மொத்த உருவம் பிள்ளையார். மனித ரூபமும் விலங்கு ரூபமும் இணைந்த வடிவானவர். எல்லா உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

மனிதன் வேள்வியில் பங்கு பெறுகிறான். யானைக்கும் அதில் பங்கு உண்டு (ஹிமவ தோஹஸ்தீ). கழுத்துக்குக் கீழே - மாயை; தலை - பரம்பொருள் என்று பிரபஞ்சத்துடன் விளங்கும் பரம்பொருளாக விநாயகரைப் பார்க்கிறது புராணம் (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்ம வாசகம்).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick