ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 15 முதல் 28 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்

முற்போக்குச் சிந்தனை கொண்ட வர்களே! உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வ தால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

ராகு, சூரியன், செவ்வாய் ஆகியோர் 4-ம் இடத்தில் இருப்பதால் கடன்களை நினைத்துக் கலக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சகோதர வகையில் அலைச்சல் உண்டா கும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அஷ்டமச் சனியும் சகட குருவும் தொடர்வதால் காரியங்களை முடிப்பதில் சிற்சில தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் தவறாகவும் புரிந்துகொள்ளக்கூடும். எதிலும் கவனம் தேவை.

வியாபாரத்தில் சந்தை நிலவரங் களை அறிந்து முதலீடு செய்வது அவசியம். வேலையாட்களுடன் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடுவார்கள்; கவனத்துடன் செயல்படவும். கலைத் துறையினரே! அறிமுகமான நிறுவனங் களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

வளைந்துகொடுத்து முன்னேறும் நேரம் இது.


ரிஷபம்

ரசிப்புத் தன்மை உடையவர்களே! குரு, ராகு, சூரியன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். மனதில் துணிவு ஏற்படும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சகோதரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கண்டகச் சனி தொடர்வதால் வாழ்க்கைத் துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. கேதுவால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சமயோசித அறிவால் சாதிக்கும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick