கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்! | Kayilai kaaladi kanchi - Sakthi Vikatan | சக்தி விகடன்

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிவேதிதா

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி

- மாணிக்கவாசகர்

மகா பெரியவாளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டார், கோழியாலம் ஸ்ரீதர ஆசார்யா.

‘` ‘நீ ஆரம்பிக்கப்போற ஸ்தாபனத்துக்கு நவஜீவன்ங்கற பேரையே வெச்சிடு’ என்று பெரியவா ஆக்ஞாபித்த சில வருடங் களுக்குப் பிறகே என்னால் கொத்தப்பேட்டை என்ற இடத்தில் சிறிய அளவில் நவஜீவன்ங்கற பேர்ல ஸ்தாபனம் தொடங்க முடிந்தது. பிறகு இந்த விஷயம் பற்றி அப்போது ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்ரமணியம் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். மத்தபடி நான் அவரிடம் எதுவும் பேசவே இல்லை. ஆனாலும், அவர் உடனே ஆனந்த விகடன்ல ஒரு செய்தியை முகவரியோட வெளியிட்டிருந்தார்.

அதைப் பார்த்து சேலம் ஆத்தூர்ல இருந்து ஒரு வாசகர் முதல் ஆளா 5 ரூபாய் மணியார்டர் அனுப்பியிருந்தார். தொடர்ந்து நிறைய வாசகர்கள் பணம் அனுப்பியிருந்தாங்க. அதிலிருந்து படிப்படியா வளர்ந்து இன்றைக்கு பல இடங்கள்ல குறிப்பா வடகிழக்கு மாநிலங்களான ஒடிசா, அசாம் போன்ற இடங்கள்ல இருக்கறவங்களுக்கு எங்களால முடிஞ்ச சேவை செய்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் மகா பெரியவா அனுக்கிரகம்தான் காரணம். இப்பத்தான் நான் எந்தக் காரணத்துக்காகப் பிறந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது’’ என்று மகா பெரியவா தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை உணர்த்திய பெருங்கருணையைச் சிலிர்ப்புடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டவர் தொடர்ந்து, ‘`மகா பெரியவா வேதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த மகான். எனவே, அவர் விருப்பப்படியும், அவருடைய அனுக்கிரகத் தினாலும், ஒடிசா பெரஹாம்பூர் (தற்போது பிரம்மபுரா என்று அழைக்கப்படுகிறது) பகுதியில் ‘நவஜீவன் அதர்வ வேத பாடசாலை’ ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick