ஸ்வாமி சரணம்!

ஐயனின் அவதாரம்... தேவியர் கல்யாணம்! ஐயப்பமார்களுக்கான அபூர்வத் தொகுப்பு

 

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஐயப்பமார்கள் மாலையணிந்து, கலியுக வரதனாம் ஸ்வாமி ஐயப்பனின் திருவடி தரிசனம் வேண்டி விரதமிருக்கும் புண்ணிய காலம் இது. இந்த வேளையில், சாமிமார்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஐயன் ஐயப்பனின் திருவருளைப் பெற்று மகிழும் விதம், அவரின் மகிமையைச் சொல்லும் சில திருக்கதைகள், விரத நியதிகள், துதிப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு உங்களுக்காக.

மகா சாஸ்தாவின் அவதாரமே சபரிமலை ஐயப்ப ஸ்வாமி. அவர் தர்ம சாஸ்தாவின் அம்சமாக  மணிகண்டனாக அவதரித்து, மகிஷியை வதைத்து, சபரிபீடத்தில் கோயில் கொண்ட திருக்கதை நாம் அறிந்ததே. இங்கே நீங்கள் படிக்கப்போவது, சாஸ்தா மணிகண்ட னாக அவதரிக்கக் காரணமான புராணக் கதையை, பூரணை-புஷ்கலா தேவியரின் திருக்கல்யாணக் கதையை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick