“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்!”

காஞ்சி மகாபெரியவா ஆசிகளுடன் தொடரும் இறைப்பணிஎஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: க.விக்னேஸ்வரன்

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் காஞ்சி மடத்தில், மகா பெரியவா தரிசனத்துக் காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந் தார்கள். வரிசையில் திருப்பூர் அன்பர் ஒருவரும் நின்றிருந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். காஞ்சியில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவைத் தரிசிக்க வந்தவர்கள் அவர்கள். அதைவிடவும் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் தொடங்கிய திருப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு மகா பெரியவாளின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி, காஞ்சி மடத்தில் வரிசையில் காத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick