ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

எதிலும் வித்தியாசமாகச் சிந்திப்பவர்களே!

ராசிநாதன் செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய திட்டம் மனதில் உதயமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியம் சாதிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சகோதரர்களால் நன்மை உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அஷ்டமத்துச் சனியால், தாழ்வுமனப்பான்மை ஏற்படும். குரு வலுவாக இருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

விட்டுக்கொடுக்க வேண்டிய வேளை இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே!

ராகு வலுவாக இருப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவு படுத்துவீர்கள். கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மன உளைச்சல், அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் பற்றிய கவலை வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை வந்து விலகும்.

28-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாவதால் உற்சாகமடைவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். என்றாலும் சுக்கிரன் சனியுடன் இணைவதால் தோலில் நமைச்சல், கை கால் வலி, சளித் தொந்தரவு வரும். சுகாதிபதி சூரியனும் சனியுடன் நிற்பதால் முதுகுவலி, ஹார்மோன் பிரச்னை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

சிந்தித்துச் செயல்படும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick