கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகுடேசுவரன்

ந்து பிரிவினராகப் பிரிந்த பாமினி அரசர்களில் அடில்சாகி பரம்பரை யினர் பீஜப்பூர் அரசர்களாகப் பதவியேற்றனர். பாமினி அரசர்கள் சிற்றரசர் களாகத்தான் தடுமாறிக்கொண்டிருந்தார்களே தவிர, நிலைத்த வல்லமையான ஆட்சியைத் தந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. எப்போதும் பதவிப் போட்டிகளும் உட்பூசல்களும் நிறைந்திருந்தமையால் அவ்வரசர்களால் பேரரசைக் கட்டியமைக்க முடியவில்லை. பாமினி அரசர்களுக்கு நேர் எதிராக விஜயநகரப் பேரரசு வளம்பெருகி நிலைத்து நின்றது. விஜயநகர மன்னர்களின் பெருஞ்செல்வம் அண்டை நாட்டு அரசர்களைப் பொறாமையோடு ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.

யூசுப் அடில்சா என்பவர்தான் பீஜப்பூர் அடில்சாகி பரம்பரையில் முதலாமவர். அவரை முகுந்தராவ் என்னும் மராட்டிய சிற்றரசர்  கடுமையாக எதிர்த்து வந்தார். யூசுப் அடில்சா, முகுந்தராவைக் கொன்றுவிட்டு அவருடைய குடும்பத்தைச் சிறைபிடித்தார். பீஜப்பூர் அரசரானதும் யூசுப் அடில்சா ஆண்டுதோறும் விஜயநகரத்தின்மீது போர் தொடுக்கத் தொடங்கினார். கி.பி. 1501-ம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட அந்தக் கொள்ளைப் படையெடுப்புகள் விஜயநகரத்தின் அமைதியைக் குலைத்தன. பெரும்படையோடு எல்லைக்குள் புகுந்து அகப்பட்ட குடிகளை யெல்லாம் கொன்று குவித்தது பீஜப்பூர்ப்படை. அகப்படும்  செல்வங்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு பறந்தது. போர் அறிவிப்பு என்று ஏதுமில்லாமல் தொடர்ச்சியாக இத்தகைய கொடுங்கொள்ளைகளும் படுகொலைகளும் விஜயநகர எல்லைக்குள் அரங்கேற்றப்பட்டன. இச்சூறையாடலில் ஆண்டுதோறும்  நூற்றாயிரத்துக் கும் குறைவில்லாத விஜயநகரக் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick