குறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

பிறையூருஞ் சடைமுடி எம்பெருமான் ஆரூர்   
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.


கருத்து: பிறை தவழும் சடைமுடி கொண்ட சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது.

திருநாவுக்கரசர் அருளிய 6-ம் திருமுறை 71-வது பதிகத்தில், மகா சக்தியும் அதிசயங்களும் கொண்ட துடையூர் தலத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். ஈசன் இருந்து அருளும் தலங்களில், ‘ஊர்’ என முடியும் தலங்களையெல்லாம் தொகுத்து அப்பர் பெருமான் பாடியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick