சிவமகுடம்

ஆலவாய் ஆதிரையான்

ருணோதய நேரம். விடியலை வரவேற்பதுபோல் விருட்சங்களி லிருந்து படபடவென சிறகடித்தபடி விழித்துக்கொண்ட பட்சிகள் எழுப்பிய சத்தம், பூபாள இசையைப்போன்று பெரிதும் சந்துஷ்டியை அளித்திருக்க வேண்டும். ஆகவே, சிறிது மலர்ச்சியைக் காட்டியது, உறையூரின் எல்லைப்புரச் சிவாலயத்தின் தூண் ஒன்றில் சாய்ந்தபடி, எண்ண அலைகளில் மனதை நீந்தவிட்டிருந்த குலச்சிறையாரின் முகம். ஆனாலும், அந்த மலர்ச்சி ஒருசில கணங்களே நீடித்தது. மீண்டும் முகம் இறுக சிந்தனையில் ஆழ்ந்தார் குலச்சிறையார்.

மனம் கடிவாளம் இல்லாத குதிரை. சாமானியர்களான நமக்கு மட்டுமல்ல; சில தருணங்களில் குலச்சிறையாரைப் போன்ற சான்றோர் களுக்கும்கூட. எளிதில் வசப்பட்டுவிடாது முன்னும்பின்னுமாய் அலைக்கழிக்கும். இப்போதும் அப்படித்தான். நடந்து முடிந்த விஷயங்கள் குறித்த எண்ணவோட்டம் அவர் சிந்தனையை மூழ்கடித்திருந்தது. எதிர்காலத்துக்கு எப்போது தாவிப்பாயும் என்று தெரியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick