யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - படம்: கே.ராஜசேகரன் - ஒவியம்: ரவி

ரு சிங்கம் கம்பிக் கதவுகளுக்குப் பின்னே கம்பீரமாய் உட்கார்ந்திருந்தது. அதன் இடது உள்ளங்கால் சிவப்பு, கண்ணைப் பறித்தது. நான் அருகே போய் இன்னும் நெருக்கமாய் பார்க்க விரும்பினேன். வேறு யாரோடோ பேசிக்கொண்டிருந்த சிங்கம் மெள்ளத் திரும்பி என்னை உற்றுப் பார்த்தது.

‘நாட் நௌ லேட்டர்’... இப்போது இல்லை பிறகு என்ற உத்தரவு போல் என்னிடம் பேசியது. நான் தயங்கினேன். உடனேயே உள்ளே போக வேண்டுமென்று ஆசைப் பட்டேன். மறுபடியும் அதே வார்த்தைகள் வந்தன. இந்தமுறை உள்ளே போகும் எண்ணம் உடைந்து போயிற்று. ஆனால், அங்கிருந்தே பார்க்கலாமே. உள்ளேதான் வரக்கூடாது, இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாமே. நான் சற்றுப் பின்னடைந்து உன்னிப்பாய் பார்க்கத் தொடங்க , ‘நாட் நௌ லேட்டர்’. என்னால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அந்த உத்தரவை மீற முடியவில்லை. கொஞ்சம் துக்கத்தோடும் கலவரத்தோடும் அதேசமயம் பணிவோடும் நான் நகர்ந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick