தோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்!

அருள்மிகு வைத்தியநாத சுவாமி - சுந்தராம்பிகை திருக்கோயில்எம்.திலீபன் - படங்கள் ராபர்ட்

ம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார், தலங்கள்தோறும் சென்று தேனினும் இனிய தேவாரப் பாடல்களால் இறைவனின் புகழைப் பாடி வழிபட்டார். அப்படி திருவாரூரிலிருந்து நன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் போன்ற தலங்களை தரிசித்தபடி வந்துகொண்டிருந்தார். திருவாலம்பொழில் தலத்து இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றிரவு அங்கேயே உறங்கிக்கொண்டிருந்தார்.

சுந்தரரின் தேனினும் இனிய பாடல்களைக் கேட்க விரும்பிய திருமழபாடி இறைவன், சுந்தரருடைய கனவில் தோன்றி, ‘மழபாடி மறந்தனையோ?’ என்று கேட்டார். விடிந்ததும் எழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து வடகரையில் இருந்த திருமழபாடி வைத்தியநாத சுவாமியை தரிசித்து, ‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து ' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அந்தப் பதிகத்தில் இறைவனை, ‘மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே’ என்றெல்லாம் உருகி உருகி பாடியிருக்கிறார். சுந்தரர் மட்டுமல்லாமல், ‘மழபாடி மன்னும் மணாளன்’, ‘மழபாடி வைரத்தூணே’ என்று அப்பர் சுவாமிகளும், ‘மழபாடியைத் தலையினால் வணங்கத் தவமாகுமே’ என்று திருஞானசம்பந்தரும் பாடிப் போற்றிய தலம் திருமழபாடி திருத்தலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick