அனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்!

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள அரண்மனையின் கிழக்கு கோட்டை பகுதியின் காவலனாகத் திகழ்கிறார் ஸ்ரீபால அனுமன். இவரின் ஆலயமே, தமிழகத்தின் பால அனுமனுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே ஆலயம் என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த ஆலயம். இங்கு அருளும் அனுமன் விக்கிரகம், அரண்மனையின் கிழக்கு பகுதியில் இருந்த ஆலமரத்தின் அடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் சந்நியாசி ஒருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1964-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின்போது பால அனுமன் சிலை அமைந்திருந்த ஆலமரம் முழுமையாகச் சேதமடைந்தது. ஆனால், அனுமனின் சிலை மட்டும் எவ்வித சேதாரமும் இன்றி வீற்றிருந்தது.  இதற்கு மேலான ஓர் ஆச்சர்யமாகப் புயலில் சாய்ந்த அந்த ஆலமரத்தின் வேரில் பால அனுமனை போன்ற உருவம் சுயமாகத் தோன்றிய நிலையில் இன்றளவும் அதை அரண்மனை ஆலய வளாகத்தில் வைத்துப் பராமரிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick