அனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்!

ரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கோவையின் கலெக்டராக இருந்த டீலன், ராஜபிளவை என்னும் கொடிய நோய்க்கு ஆளானார். வலியும் வேதனையும் தாங்கமுடியாமல் தவித்தவர், மற்றவர்கள் சொல்லியதன்பேரில்  ஓர் அனுமன் கோயிலுக்குத் தொடர்ந்து சென்று வழிபட்டுவர, ராஜபிளவை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். தனக்கு அருளிய ஆஞ்சநேயருக்குக் காணிக்கையாகக் கோயில் கர்ப்பகிரகத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்தார். கோயில் கோபுரம் கட்ட முயற்சி செய்தபோது, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், `கோபுரம் கட்ட வேண்டாம்' என்று கூறிவிட்டார்.  அதன் காரணமாகவே இன்றைக்கும் அந்தக் கோயில் கோபுரம் இல்லாமல்தான் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick