ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டிசம்பர் 5 முதல் 18 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

டந்து வந்த பாதையை மறக்காதவர்களே!

தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலையுயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். புதன் 8-ல் இருப்பதால், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.

ராசிநாதன் செவ்வாய் 7-ல் இருப்பதால், கணவன்  மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடவேண்டாம். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடத்துக்குச் செல்வதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனால், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், ஏமாற்றம், தலைச்சுற்றல் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அடுத்தடுத்த வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரே, உங்களுக்குப் புதுச் சலுகைகள் கிடைக்கும்.

அலைச்சல் குறைந்து ஆதாயம் பெருகும் தருணம் இது


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

ற்றவர்கள் செய்த உதவியை மறக்காதவர்களே!

செவ்வாய் வலுவாக இருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். துணிந்து முடிவு எடுப்பீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்படும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றி பெறும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராகு 3-ல் இருப்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ஆனால், சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால், சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மேலதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினரே, உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திட்டமிட்டுக் காரியம் சாதிக்கும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick