கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? மதுரையில் அருளும் பாண்டி முனீஸ்வரரையே குலதெய்வமாக வணங்கி வருகிறோம் நாங்கள். ஆனால், சமீபத்தில் ஜோதிடர் ஒருவர் ஒரு பெண் தெய்வமே எங்களின் குலதெய்வம் என்கி றார். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?

- க.இசக்கிமுத்து, சென்னை-44

குலதெய்வத்தை நிர்ணயம் செய்வது ஜோதிடம் அல்ல. ஆராதனை செய்ய வேண்டிய வேளையை வரையறுப்பதோடு அதன் வேலை முடிந்துவிடும். இதற்கு, ‘கால விதான சாஸ்திரம்’ என்று பெயர். மனம் விரும்பிய இறை உருவத்தை நம் முன்னோர் குலதெய்வமாக ஏற்று வழிபட்டனர். அவர்கள், ஜோதிடரை அணுகி குலதெய்வத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.

முன்னோர் வணங்கிய தெய்வம் தங்களுக்குத் தெரியவில்லை. தாங்களாக ஒரு குலதெய்வத்தை ஏற்றுப் பணிவிடை செய் கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தெரியாத குலதெய்வத்தை வணங்காதது தவறாகாது.

தாங்கள் வணங்கும் குலதெய்வம், எல்லா தவறுகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். எல்லா தெய்வங்களிலும் உறைந்திருக்கும் சக்தி ஒன்றுதான். விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுப்பது தவறில்லை.


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick