ஆஞ்சநேய ரக்ஷமாம்!

மு.ஹரி காமராஜ் - படம்: உ.பாண்டி

அனுமன் பாடிய ராகம்!

எந்நேரமும் ஸ்ரீராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்கும் அனுமன் சிறந்த இசைவாணரும்கூட. அனுமனின் சிறு வயதில் அவர் செய்த சுட்டித்தனங்களைப் பொறுக்கமுடியாத அகத்திய மகரிஷி, அனுமனை சாந்தப்படுத்தி அவரின் மனதை ஒருமுகப்படுத்துவதற்காக, அவருக்கு வீணை வாசிக்கக் கற்றுக்கொடுத்தாராம். இசைஞானம் கைவந்ததும் குண்டக்ரியை எனும் ராகத்தைக் கண்டறிந்து முதன்முதலில் பாடினார் அனுமன். இசை மேதை என்று கர்வம் கொண்டிருந்த நாரதரை அடக்கவே இந்த ராகத்தை இசைத்தாராம் அனுமன்.


ரோமமும் ஜபிக்கும் ராம நாமத்தை...

‘ரோம ரோமமு ராம நாமமே’ என்று சிறப்பிப்பார்கள் சான்றோர்கள். அதாவது ராமபக்தியில் அனுமனை மிஞ்சக்கூடிய எவரும் இல்லையாம். அனுமனின் உடலில் இருக்கும் ஒவ்வொரு முடியும் கூட ராமநாமத்தை ஜபித்தபடியே இருக்கும் என்ற பொருளில் இந்த வாக்கியம் அமைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick