ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் 

திட்டமிட்டுச் செயல்படுபவர்களே!

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால், அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் சுமுகமாக முடியும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

புதனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், உற்சாகம் கூடும். பால்யகால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆனால், அஷ்டமச் சனி தொடர்வதால், எதன்பொருட்டும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்ப தால், நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்துகொள்வீர்கள். கனிவாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தை விரிவுபடுத்துவது குறித்துச் சிந்திப்பீர்கள். கலைத் துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

தர்மச் சிந்தனையால் பாராட்டப்படும் தருணம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

செய்நன்றி மறவாதவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். புதிய வர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்வீர்கள். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும்.

ஆனால், சனி 7-ல் கண்டகச் சனியாகத் தொடர்வதால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். அடிக்கடி அசதியும் சோர்வும் ஆட்கொள்ளும். செவ்வாய் 2-ல் இருப்பதால், முன்கோபம், பேச்சில் தடுமாற்றம் வந்துசெல்லும். ஒரு சொத்தை விற்றுவிட்டு, வேறு சொத்து வாங்குவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், செல்வாக்கு உயரும். பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும், அனுசரித்துச் செல்லுங்கள்; தர்க்கம் வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick