சித்திர ராமாயணம் | Pictorial Ramayanam - Sakthi Vikatan | சக்தி விகடன்

சித்திர ராமாயணம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பி.ஸ்ரீ.

கடலும், காடும்

ரு பெருங்கடல். அலைகள் நிமிர்கின்றன, நுரைக்கின்றன, மோதுகின்றன, சுருட்டியடிக்கின்றன, உடைகின்றன, மறிந்தும் முறிந்தும் விழுகின்றன, மறைகின்றன. இவற்றுக்கிடையே கிடக்கிறோம், மிதக்கிறோம், மொத்துண்டு கிடக்கிறோம்; எனினும் கடல் கண்டோமில்லை!

 என்ன கடல்?


அலைமேல் அலையெறிந்த வண்ணமாயிருக் கிறது. பேரலைகளும் சிற்றலைகளும், நுரைகளும் நுரைக் கொழுந்துகளும், நீர்க் குமிழிகளும் சுழிகளும் - இவற்றில் எல்லாம் எத்தனை விதம் விதமான உருவங்கள், அழகுகள். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, மிருகம், மக்கள், தேவர் ஆகிய சராசரி உருவங்களெல்லாம், இக்கடலின் அலைகள் முதலியன. பேதம் இல்லாத கடல், நிமிர்ந்து எழுந்து விழுந்ததும், எத்தனையோ பேத உருவங்கள் - பல்வேறு சராசரி வடிவங்கள் எழுகின்றன, நிலவுகின்றன, விழுகின்றன. நமது நெஞ்சின் அலைகளும் - எண்ணங்கள், விருப்பங்கள், உணர்ச்சிகள் எல்லாம் - இந்த நீலக்கடலில் நிமிரும் அலைகளே. மண்ணுலகத்தைக் காத்துக்கிடக்கும் உவர்க்கடல் போல், இக்கடல் மண்ணையும் விண்ணையும் ஒருங்கே காத்துக்கிடக்கிறது; உலகங்களையெல்லாம் கோத்துக் கிடக்கிறது, ஒரு கோவையாக. பல்வேறு பொருள்களிலும் உயிர்களிலும் கலந்திருந்து, இவற்றையெல்லாம் கோத்தும், காத்தும் கிடக்கிறதாம் இப்பெருங்கடல். இவற்றில் எல்லாம், தான் கலந்திருந்தும் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் தன் நிலையிலும் (கடவுள் - நிலையிலும்) மாறுபடாமல் இருக்கிறதாம். ஆம், இக்கடலுக்குப் பெயர் கடவுள். இது சச்சிதானந்தக் கடல்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick