ராவணன் பாடலுக்கு நடராஜர் ஆடிய தாண்டவம்! | Natarajars dance to Ravana song - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராவணன் பாடலுக்கு நடராஜர் ஆடிய தாண்டவம்!

மு.ஹரிகாமராஜ் - ஓவியம்: பத்மவாசன் - படம்: ரமேஷ் முத்தையன்

டராஜப் பெருமானின் நாட்டிய அசைவில் தான் உலகமே இயங்குகிறது என்பதும், பிரபஞ்ச அசைவே ஓர் ஒழுங்கான தாளகதியில் நடைபெறும் தாண்டவம்தான் என்பதும், நம் உடலில் இயங்கும் வாயுக்களின் அசைவும்கூட நாட்டியம்போலவே இருக்கிறது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. நடராஜப் பெருமான் பல வகையான தாண்டவங் களை ஆடியிருக்கிறார். ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், உன்மத்த தாண்டவம், காளிகா தாண்டவம் என்று பல தாண்டவங்களை நடராஜப் பெருமான் ஆடியிருக்கிறார். இப்படிப் பல்வேறு  காலகட்டங்களில் பல காரணங் களுக்காகச்  சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ராவணனுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவம்தான் பஞ்ச சகார சண்ட நாட்டியம் என்னும் தாண்டவமாகும்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick