ஆன்மிக துளிகள்...

புன்னைநல்லூரில்  முத்துப்பல்லக்கு!

ற்புத பலன்களை அள்ளி வழங்கும் மகத்துவமான திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர். இங்கே கோயில்கொண்டிருக்கும் அன்னை மாரியம்மன், வேண்டுபவருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் கற்பகத்தருவாகத் திகழ்கிறாள். எந்தவொரு மனக் கஷ்டமாக இருந்தாலும் சரி, புன்னைநல்லூர் சென்று  அம்மனை வேண்டிக்கொண்டு, கொஞ்சம் உப்பும் மிளகும் வாங்கி, கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, கொஞ்சம் வெல்லத்தை வாங்கி, கோயில் குளத்தில் கரைத்துவிட்டுப் போனால் போதும். நமது துன்பமும் சேர்ந்து கரைந்துபோகும்; வாழ்க்கை வெல்லமாக இனிக்கும் என்பது ஐதீகம்.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick