ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

எதிர்நீச்சல் போட்டுச் சாதிப்பவர்களே!

புதன் 4-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சுக்கிரன் 2-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். ஆனால், 5-ம் வீட்டில் ராகு நிற்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். உறவினர்களில் சிலர் உங்களைப் பாராட்டிப் பேசினாலும் சிலர், உங்களை உதாசீனப் படுத்துவார்கள். 11-ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். வழக்கில் வெற்றி கிட்டும். குருவும் சனியும் சாதகமாக இல்லாததால் எதிர்காலம் குறித்த பயம் வரும். வதந்திகளும் அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு, கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

பணிந்து போக வேண்டிய காலம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

எடுத்த முடிவில் மாறாதவர்களே!

பூர்வ புண்ணியாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்கள் தேடி வருவார்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். 11-ம் தேதி வரை ராசிக்கு 2-ல் செவ்வாய் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆனால், ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வியாபார ரகசியங்கள் கசியக்கூடும் என்பதால் கவனம் தேவை. பங்குதாரர்களால் விரயம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில நேரங்களில் கடிந்து பேசினாலும், பல நேரங்களில் கனிவாகவும் நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். கலைத்துறையினர்களே! விடாமுயற்சியால் சாதிப்பீர்கள்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick