ஆஹா... ஆன்மிகம்! - மகரம்

கரம் - செல்வத்தின் அடையாளமாகப் புராணங்களால் சிறப்பிக்கப்படுகிறது.  `மகர்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு முதலை என்று தற்போது பொருள்கொண்டாலும், மகரம் என்பது ஆதிகாலத்தில் வாழ்ந்த நீர்வாழ்ப் பிராணி என்ற குறிப்புகள் உள்ளன.

ண்டைய மக்கள் ஆபரணங்களையும் மகரத்தின் பெயரால் அழைத்தனர். நெற்றியில் அணியும் மகரப்பகுவாய், கழுத்தில் அணியும் மகரக்கண்டிகை, காதில் அணியும் மகரக்குண்டலம், கைகளில் அணியும் மகரக் கங்கணம் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.

சைக்கருவிகளிலும் மகரத்துக்குச் சிறப்பிடம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மகர யாழும் மகர வீணையும். விழாக் காலங்களில் செல்வச்செழிப்பைக் குறிக்கும் விதமாக மகரத் தோரணங்கள் அமைக்கும் வழக்கமும் உண்டு. சில ஆலயச் சிற்பங்களிலும் மகரங்கள், மகரத் தோரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கரங்கள், யானைக் கூட்டத்தையே தனித்து நின்று வெல்லும் ஆற்றல் கொண்டவை. துதிக்கையும் இறக்கைகளும் கொண்ட மகரங்கள் பறக்கும் வல்லமையும் நீந்தும் திறனும் கொண்டவை என்கின்றன புராணங்கள். இதையொட்டி, கலைஞர்கள் தங்களின் கற்பனைக்கேற்ப மகரத்துக்குப் பலவிதமான வடிவங்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பேரை எனும் தலத்தில் அருளும் பெருமாள் மகரக் குழைகளை அணிந்திருப்பதால், அவருக்கு மகரநெடுங் குழைக்காதர் என்றே திருப்பெயர் உண்டு. வருணன், கங்காதேவி, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்கள் மகர வாகனத்தைப் பெற்றவர்கள் என்கின்றன ஞானநூல்கள்.

வாழை இனங்களில் மகர வாழை என்றொரு வகையுண்டு. ஆண் குழந்தைகள் குழந்தைப் பருவத்தைத் தாண்டும்போது குரல் மாறும். இதை மகரக் கட்டு உடைதல் என்பார்கள். மகரக் கட்டு என்பது இளம் பருவத்து இனிய குரலின் பாங்கு.

தொகுப்பு: அருண வசந்தன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick