ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை | Astrological predictions - Rasipalan - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

வாக்கு தவறாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சூரியன் 2-ல் நிற்பதால், வார்த்தை களில் நிதானம் தேவை. 26-ம் தேதி முதல் செவ்வாய் 3-ல் வலுவாக இருப்ப தால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில், ஒரு பகுதியைக் கட்டி முடிப்பீர்கள். குரு 6-ல் நீடிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட காரியங்களைப் பேசி முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங் களைச் சரி செய்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில், வேலைச் சுமை குறையும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகளுடன் இருந்து வந்த பனிப் போர் விலகும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

அனுபவ அறிவு நிரம்பியவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதுப் பதவிகள் தேடி வரும்.

ராசிக்குள் நிற்கும் சூரியனால், தூக்கமின்மை, கோபம், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். குரு பகவான் 5-ல் இருப்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்ப தால், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

கண்டகச் சனி தொடர்வதால், வியா பாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்க வும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது அவசியம்.

புதிய பதவிகள் தேடி வரும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick