கடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்!

அட்டைப்படம்: மஹிதங்கம்

னிதனுக்கு மூவகைக் கடன்கள் உள்ளன என்கின்றன ஞானநூல்கள். அவை தேவ கடன், பித்ருக் கடன், ரிஷி கடன். இவற்றை நாம் செய்யவேண்டிய அறங்களாக, கடமைகளாகவே ஏற்க வேண்டும். 

அனுதின பூஜை வழிபாடுகளாலும், வேள்வி ஆராதனைகளாலும், ஆலய தரிசனங்களாலும் தேவ கடனை நிறைவேற்றுகிறோம். முன்னோருக்குச் செய்யவேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலானவற்றை முறைப்படி செய்வதன் மூலம் பித்ருக் கடனை நிறைவேற்றுகிறோம். மகான்களை, சாதுக்களை ஆராதிப்பதன்மூலம் ரிஷி கடனை நிறைவேற்றுகிறோம். இவை யாவும் பெரும் புண்ணியங்களை அளித்து, நமது பிறவியைப் பூரணத்துவமாக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
எனினும் பொதுவில் ‘கடன்’ எனும் சொல், பொருளாதாரப் பற்றாக்குறையால் ஏற்படும் நமது சுமையைக் குறிப்பதாகவே திகழ்கிறது. வேலையில்லாமையால் கடன், படிப்புக்காகக் கடன், வீடுகட்டுவதற்காகக் கடன், பிள்ளைகளின் கல்யாணத்தின் பொருட்டு கடன், மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கடன்... இப்படி தனிமனிதனின் கடன் பிரச்னைகள், அவனுக்குப் பெரும் சுமையாகி அழுத்துகின்றன. கடன் இல்லாத வாழ்க்கைதான் கவலையில்லாத வாழ்க்கை. பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் கடன் பிரச்னைகள், நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்து விடும். திக்கற்றவருக்குத் தெய்வமே துணை. அவ்வகையில் கடன் சுமையால் திக்கற்று தவிக்கும் அன்பர்கள், கடன் சுமையில் இருந்து விடுபடும் பொருட்டு, தெய்வத்தின் திருவருளை நாடுவதற்கான எளிய வழிபாடுகள், கடன் பிரச்னை தீர திருவருள்புரியும் தெய்வ துதிப் பாடல்கள், ஜாதகத்தில் கடன் பிரச்னையைக் குறிக்கும் கிரகநிலைகள், அவற்றுக்கான எளிய பரிகாரங்கள் ஆகியவைக் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick