ராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

தவறுகளைத் தட்டிக்கேட்பவர்களே! சுக்கிரன் ராசிக்குள்ளேயே இருப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

ஆனால், ராகு 5-ல் இருப்பதால், அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். அதே நேரம் கேது லாப வீட்டில் இருப்பதால், கடன்கள் தீரும். ஷேர்மூலம் பணம் வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளா தீர்கள். கலைத் துறையினரே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

காத்திருந்து சாதிக்கவேண்டிய காலம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

பொறுமையுடன் இருந்து சாதிப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பண வரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.  பிள்ளைகளால் செலவும் அலைச்சலும் ஏற்படக்கூடும்.

ராகு 4-ல் தொடர்வதால், பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். கேது 10-ல் இருப்பதால், வி.ஐ.பி-க்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. குரு 5-ல் சாதகமாக இருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். உத்தியோகத்தில் கட்டுப்பாடுகள் நீங்கும். எனினும், உங்களுக்கு எதிரான சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். கலைத் துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும்.

விடாமுயற்சியால் லட்சியத்தை அடையும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick