பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!

வடமேற்கும் தென்மேற்கும் திருப்பம் தரும்!

சந்திரனின் குளுமையும், செவ்வாயின் சீற்றமும் ஒருங்கிணைந்த அம்சமாகத் திகழ்வது எண் 29. சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருப்பதை ஜோதிட நூல்கள் சந்திர மங்கள யோகம் என்கிறது.
செவ்வாயும் சந்திரனும் தண்டவாளங்களைப் போல் இணையவும் மாட்டார்கள்; விட்டு விலகவும் மாட்டார்கள். ஆனால், இருவரும் ஒருசேர ஆட்டிப்படைப்பார்கள். எனவே, இந்தத் தேதியில் பிறந்தவர்களை அவர்களுடைய உணர்வுகள் ஆட்டிப்படைத்துக்கொண்டே இருக்கும்.

தாங்கள் சொல்வதை ஊரார் கேவலமாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் இவர்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அதன் காரணமாகவே இயல்பான தங்கள் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம் என்பதால், தைரியம் குறைவாகவே இருக்கும். தன்னையும் நம்ப மாட்டார்கள்; மற்றவர்களையும் நம்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு உடனே யோசனை சொன்னாலும், தனது காரியத்துக்கு மட்டும் பலமுறை யோசிப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick