சித்திரை வைபவங்கள்...

* தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத் தில் உள்ளது அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில். இங்கு, சித்திரைப் பெருவிழாவின் 9-ம் நாளன்று பஞ்சமுக கணபதி, நடராஜ பெருமானுடன் திருவீதியுலா வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

* திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமியன்று, கிழக்கு கோபுரத்தின் முன் பசு நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரியிட்டு விளக்கேற்றி, அதை உயர்த்திப்பிடித்தபடி அண்ணாமலையாரைத் தரிசித்தபின் கிரிவலம் வருவதும், ஸ்ரீபூதநாராயண பெருமாள் ஆலயத்தில் பூக்களைத்  தானம் செய்து கிரிவலத்தை நிறைவு செய்வதும் சிறப்பு என்பது பக்தர்களது நம்பிக்கை.

* திருப்பரங்குன்றம் அருள்மிகு பவளக்கனி வாய் பெருமாள், சித்திரையில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே, மதுரைக்குச் சென்று விழா முடிந்து திரும்புவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

* திருச்சி அருள்மிகு தாயுமானவர் திருக்கோயிலில், சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளன்று, இறைவன் தாயாக வந்து செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஐதீக விழா நடைபெறுகிறது. அன்று சுக்கு, வெல்லம் கலந்த மருத்துவப்பொடி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

- எஸ்.ராஜம், சேலம்-2

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick