கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்! | parameswarar temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் பிரம்மேஸ்வரர் ஆலயம்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: ச.வெங்கடேசன்

ல்விக் கூடங்களுக்கும், கலைக் கூடங்களுக்கும் தலைமைக் கேந்திரமாகத் திகழ்ந்த காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் பல்லவர்கள். அவர்கள் காலத்தில் கல்வியும், கலைகளும் மட்டுமில்லாமல், ஆன்மிகமும் தழைத்துச் செழித்தது. பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் மிகச் சிறந்த சிவபக்தராகவும், கல்வி மற்றும் கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்தார்.

தமிழுக்காகத் தன் உயிரையே சமர்ப்பணம் செய்த பெருமைக்குரிய மூன்றாம் நந்திவர்மன், தன்னுடைய சிவபக்தியின் காரணமாக எண்ணற்ற சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்திருப்பதுடன், புதிய சிவாலயங்களையும் நிர்மாணித்திருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஓர் ஆலயம்தான்,  அரக்கோணத்துக்கு மேற்கே அமைந்திருக்கும் வேலூர்பாளையம் அருள்மிகு பிரம்மாம்பிகை சமேத அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோயில்.

இந்த ஆலயம் சிதிலம் அடைந்திருப்பதாக வாசகர் ஒருவர் தகவல் கூறியதைத் தொடர்ந்து, நாம் வேலூர் பாளையத்துக்குச் சென்றோம். கோயிலின் திருப்பணிகள் தொடங்கி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் கரைந்துபோனது. காரணம், போதிய நிதி உதவி கிடைக்காத காரணத்தால், திருப்பணிகள் தொய்வு அடைந்திருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்ததுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick