ஸ்ரீராமாநுஜ பிரசாதம்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: வெங்கடேஷ், மி.நிவேதன்

னிதர்கள் அனைவரிடமும் அன்பும் கருணையும் கொண்டு அருள்புரிந்த மகான் ராமாநுஜரின் திருவருட் பிரசாதம், சிற்றின்பத்தில் மூழ்கித் திளைத்த ஒருவரின் மனதை மாற்றி, பெண்கள் எல்லோரையும் தெய்வமாகப் பார்க்கும்படிச் செய்துவிட்டது!

மகானின் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த அற்புதச் சம்பவம்...

ஒருமுறை ஸ்ரீராமாநுஜர் தம்முடைய சீடர் களுடன் யாத்திரை புறப்பட்டார். யாத்திரை செல்லும் வழியில் திருக்கோவிலூரை அடுத்துள்ள எண்ணாயிரம் என்ற கிராமத்தில் தங்குவதற்குத் திருவுள்ளம் கொண்டார். அந்த ஊரில் அவருடைய பக்தர்களும் சீடர்களுமான யக்ஞேசர், வரதாச்சார்யர் என்பவர்கள் வாழ்ந்து வந்தனர். யக்ஞேசர் வசதி படைத்தவர் என்பதால், தம்முடைய சீடர்களின் உணவு மற்றும் தேவைகளை அவரால் கவனித்துக் கொள்ள முடியும் என்று நினைத்த ஸ்ரீராமாநுஜர், செய்தியை யக்ஞேசருக்குத் தெரிவிக்க இரண்டு சீடர்களை அனுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick