புதிய புராணம்! - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாற்கடல் பாடம்

னது நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு நான் பொறுப்பு. எனது பணியிடத்தில் என்னிடம் சிலரைப் பற்றி வேறு சிலர் புகார் செய்வார்கள்.

 “சார், அவன் வேலையே செய்ய மாட்டான்! நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க.’’

“குறிப்பிட்ட அந்த ஆள் நீங்க இல்லாதபோது நடந்துகிட்ட விதம் சரியில்லை சார். நிர்வாக விதிகளுக்குப் புறம்பானது.’’

“அந்த அம்மா வேணும்னே வேலையை மெதுவா செய்யுது சார்...”

இப்படி, வரிசையாக நீளும் அந்தப் புகார் பட்டியல்.

என்ன செய்யலாம்? புகார் உண்மை என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடலாமா?

குற்றம் சாட்டப்பட்டவரின் மீது, சம்பிரதாய நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்து விட்டு அவரைப் பணியிலிருந்து நீக்கலாமா?

அப்புறம்?! நாம் எதிர்பார்த்தது நடந்துவிடுமா? அதற்கான சாத்தியம் குறைவுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick