ராசிபலன் | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏப்ரல் 25 முதல் மே 8 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்

தன்மானம் மிக்கவர்களே!


கேது வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணவரவு, உதவிகள் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். உங்கள் தனாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புது வாகனம் வாங்குவீர் கள். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும்.

புதன் 12-ல் மறைந்திருப்பதால், பழைய கடன்களை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் இருப்பதால், கண் மற்றும் பல்வலி வந்து செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து டென்ஷன் அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருப்பதாலும், குரு 6-ல் இருப்பதாலும் வீண் பழி, அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம்  கனிவு தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத் துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

தடைகளைக் கடந்து முன்னேறும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick