ராசிபலன் - மே 9 முதல் 22 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

தன்னம்பிக்கையுடன் சாதிப்பவர்களே! புதன் ராசிக்குள் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எனினும் எதிர்பாராத செலவுககளால் சேமிப்புகள் கரையும். கண், காது, பல்வலி வந்து போகும்.  பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முதுகு மற்றும் மூட்டுவலி வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்க வேண்டும். சுக்கிரன் 12-ல் மறைந்து நிற்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பைப் பார்த்து மேலதிகாரி வியப்பார். சம்பளம் - பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணம் இது.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

மற்றவர்களின் மனதைப் புரிந்துகொள்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க உதவி கிடைக்கும். சொத்து சேர்க்கையும் உண்டு. உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால், முன்கோபம், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து போகும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குரு சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் ராசிக்குள்ளேயே நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுவதால், வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் வியக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். கலைத் துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

விடாமுயற்சியுடன் இலக்கை எட்டும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick