ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்!

அருண வசந்தன்

பாண்டிச்சேரிக்கு அருகில் புளிச்சப்பள்ளம் எனும் ஊர் உள்ளது. புள்ளிசைப்பள்ளம் என்பதே புளிச்சப்பள்ளம் ஆனது என்பார்கள். ‘புள்’ என்றால் பறவை. பறவைகள் இசை பாடி மகிழுமிடம் என்ற பொருளில் இவ்வூரின் பெயர் அமைந்தது என்பர்.

னிய காதற் பறவைகள் சகோரப் பறவைகள். இவை சந்திர ஒளியை உண்டுவாழும் என்பதால் நிலாமுகி என்று சிறப்பிக்கின்றன. ஞான நூல்கள். திருவஞ்சைக்களத்தில் சகோரப் பறவைகள் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறுவர்.

ருண்டையான சிறு வடிவம் கொண்ட பறவை சக்ரவாகம். அம்பிகை சக்ரவாகப் பறவையாக வடிவம்கொண்டு பூஜை செய்த தலம், சக்கரப்பள்ளி. இங்குள்ள இறைவன் சக்ரவாகேசுவரர்; இறைவி அல்லியங்கோதை.

லவகையான பறவைகள் கூடி சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்கள் பறவையீச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன. புறவார் பனங்காட்டூர் எனும் பனையபுரம் திருத்தலத்தில் உள்ள கண்கொடுத்த நாதர் ஆலயம், அங்குள்ள கல்வெட்டில் ‘பறவையீச்சரம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

ந்தைகளில் கோட்டான்கள், கூகைகள் என்று பலவகை உண்டு. வடநாட்டு லட்சுமி திருவுருவப் படங்களில் சோழிக்குவியல்மீது ஆந்தை அமர்ந்திருப்பதைக் காணலாம். தட்சிணாமூர்த்தி அருளும் கல்லால மரப்பொந்தில் ஆந்தை திகழ்வது உண்டு. அதேபோல் கூகைகள் வழிபட்ட திருத்தலங்களும் உண்டு. அவை, சின்ன சேலத்தை அடுத்த கூகையூர், பிரான்மலை போன்றனவாகும்.

னிய குரலில் கூவுவது குயில். இந்திரன் குயில் வடிவில் பல தலங்களில் வழிபட்ட தகவல் உண்டு. இதையொட்டி குயிலை இந்திரகோகிலம் என்றும் கூறுவர். சிவனாரை மதியாது தட்சன் நடத்திய யாகத்தை அழிக்கச்சென்றார் வீரபத்திரர். அப்போது அங்கிருந்த இந்திரன் குயிலாக மாறி தப்பிக்க முயன்றான். வீரபத்திரர் அவனைப்பிடித்து சிறகுகளை அரிந்து, தூக்கி எறிந்தார். அவன் விழுந்த இடம் இந்திரநீல பர்வதம். பின்னர், அவன் அங்கே நீலாசல நாதரை வழிபட்டு, நற்கதி பெற்றதாகப் புராணம் கூறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick