கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 12 | History and special darshans of temples - Hambi - Sakthi Vikatan | சக்தி விகடன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகுடேசுவரன்

விஜயநகரத்துக்கு வித்யாநகரம் என்று இன்னொரு பெயரும் உண்டு. முன்னது வெற்றித் திருநகர் என்ற பொருளைக் குறிப்பது. பின்னது கலை கல்விகளின் நகரம் என்ற பொருளில் அமைந்தது. பொருள் அதுதான் எனினும் வித்யாரண்யர் என்னும் மூத்த சமயப் பெருமகனார் ஒருவரின் நினைவைப்போற்றும் வகையில் அமைந்ததுதான் அப்பெயர்.

போர்த்துக்கீசியப் பயணிகளின் குறிப்பில் இந்நகரத்தின் பெயர் பிஸ் நகர் (Bis Nagar) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துக்கீசியர்களிடம் `வி' என்ற ஒலிப்பு `பி' என்று மாறும். ஐரோப்பியர்களின் வாயில் நுழையாத, ஒலிப்பில் அமையாத நம்மூர்ப் பெயர்கள் பலவற்றையும் அவர்கள் போக்குப்படி வழங்கியிருக்கிறார்கள். சதுரங்கப்பட்டினத்தைச் சத்ராஸ் (Sadras) என்று வழங்கிவிட்டார்கள். இதன் அடிப்படையில் மெட்ராஸ் என்பது முத்துராசுப்பட்டினம் என்பதிலிருந்துதான் தோன்றியது என்ற குறிப்பும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick